விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியில், திமுக கட்சி சார்பில் செயல்படும் பேரறிஞர் அண்ணா மன்றம் நூலகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து, ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி