திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடையக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்று ஓரங்களில் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நங்காஞ்சியாற்றில கலப்பதால், மாசடைந்து சாக்கடை போல் மாறி பல இடங்களில்
தேங்கி நிற்கிறது. மேலும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கழிவு நீர் கலப்பதை தடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி