மதுரை : மதுரை திருமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ. 2.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், திண்டுக்கல் முதுநிலை மண்டல மேலாளர் ம.சிவஜோதி, மேலாளர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் போ. புஷ்பலதா , திருமங்கலம் பா. அருண் ஜெகன் நாராயணன், மற்றும் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அம்மாபட்டி பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.ஜெயராம், திரு. உலகநாதன் திரு.கே.கே.கு.காமாட்சி மதுரை தெற்கு மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் திரு. சுப்பிரமணியன் அமைப்புசாரா மாவட்ட தலைவர் திரு.பொன் மகாலிங்கம் வட்டார தலைவர்கள் திரு.முருகேசன் திரு.காசிநாதன் டி.கல்லுப்பட்டி திரு.கணேசன் ஓ பி சி பிரிவு வட்டார தலைவர் திரு. மணிகண்டன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.சௌந்தர் திரு. சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது