மதுரை : மதுரை அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மாதா பிறந்த நாளாக கொண்டாடப்படும் செப்டம்பர் 8ம் தேதி திருவிழாவாக கொண்டாடப்பட்டு தேர் பவனியுடன் நிறைவுபெற்றது. 29ஆம் தேதி முதல் தினமும் மாலை 6 மணிக்கு அன்னையின் திருவுருவப் பவனியும், ஜெபமாலை வழிபாடும் அதனைத் தொடர்ந்து 6.30 மணிக்கு நவநாள் திருப்பலியில் பல்வேறு பங்குகளை சேர்ந்த அருட்தந்தையர்கள் பல்வேறு தலைப்புகளில் மறைவுறையாற்றி திருப்பலி நிறைவேற்றினார்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு மக்கள் திருப்பயணிகளாக வந்து நவநாள் திருப்பலியை சிறப்பு செய்தார்கள். தினமும் காலை 11:30 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று செப்டம்பர் மாதம் 8-ம் தேதி திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அன்னையின் திருவுருவப் பவனி நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீருடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை எட்வின் சகாய ராஜா தலைமையில் பங்கு இறை மக்கள் செய்து வந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. ஆண்டனி வினோத்