திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அச்சுத மங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து மேலும் புனித நீரை பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர். மேலும் மதநல்லினத்திற்கு எடுத்து காட்டாக அதே பகுதியைச் சார்ந்த உள்ள இஸ்லாமிய தோழர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு பேனர் வைத்தனர், மேலும் இஸ்லாமியர்கள் சீர் வரிசை எடுத்து ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து வந்தனர். மேலும் தேநீர், குடிநீர், நீர் மோர், குளிர்பானம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி