திண்டுக்கல் : தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வளங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி , திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, புஷ்பத்தூர் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை, (15.9.2023) வழங்கி பேசினார். அருகில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச. காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக்முஹைதீன், பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ. சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் இரா. சத்திய புவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கா. பொன்ராஜ் , தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்
பி .சி .தங்கம் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் க.கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி