திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனைக்கு நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம் மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் இல்லாததால் மீஞ்சூர் கிழக்கு தி.மு.க ஒன்றிய செயலாளரை வட்டார மருத்துவர் நேரில் சென்று மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்களை வாங்கித் தருமாறு கோரிக்கை வைத்தார். மருத்துவரின் கோரிக்கையை ஏற்று மீஞ்சூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் வல்லூர் எம் .எஸ். கே ரமேஷ் ராஜ் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து. பின்பு
அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணப் பொருட்களை மீஞ்சூர் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் அவர்கள் மீஞ்சூர் வட்டார மருத்துவர் முகமது ஹசீன் அவர்களிடம் வழங்கினார். அருகில் மருத்துவர் சண்முக ரவி சந்தோஷ், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நந்தியம் கார்த்திக், நாலூர் சங்கர், உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு