மதுரை : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், மதுரை மாநகரில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தினை (19.09.2023) அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரையைச் சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கான அரசு சிறார் கூர்நோக்கு இல்லம் மதுரை மாநகரில் உள்ள காமராஜர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த கூர்நோக்கு இல்லத்துக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், இந்தக் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள அடிப்படை வசதிகள், சமையலறை, படுக்கை அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள சிறார்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனக் கேட்டறிந்து, சிறுவர்களுக்கு வழங்கப்படும். உணவு, உடை போன்றவை குறித்து அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கப்படும் போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி குற்றங்களில் ஈடுபடாத வகையில் வாழ்வதற்கு வழங்கப்படும் பயிற்சிகள், உளவியல் சார்ந்த பாடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி