மதுரை :விவேகானந்த கல்லூரியின் இரத்த தான மையம், நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சென்சுரு சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையம், மேலக்கால், வாடிப்பட்டி, மதுரை இணைந்து விவேகானந்த கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. முகாம் பிரார்த்தனையுடன் தொடங்கியது. குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் தலைமையுரை வழங்கினார். வாடிப்பட்டி வட்ட சுகாதார ஆய்வாளர் திரு சி.ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்கள். சாய்ராம் மண்டல இயக்குனர் நாட்டுநலப்
பணித்திட்டம், சென்னை, முனைவர் எம்.செந்தில் குமார், மாநில திட்ட அலுவலர், நாட்டுநலப்பணித்திட்டம், சென்னை முனைவர் எம்.பாண்டி ஒருங்கிணைப்பாளர், நாட்டுலப்பணி திட்டம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை டாக்டர் பி.ஆர். ஹரி பிரசாத், டாக்டர் சத்திய ராணி, பி.முத்துராஜ் , C.ராஜேஷ், சி. பிரபாகரன், என்.இனிய குமார், திரு பி.சதீஷ் ,கே.மலர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
இந்நிகழ்ச்சியினை, முனைவர் கே. காமாட்சி, கேப்டன் வி. ராஜேந்திரன், முனைவர் ஜி.அசோக் குமார் முனைவர் கேரமேஷ் குமார், திரு.எம்.ரகு முனைவர் ஜி .ராஜ்குமார், முனைவர் என்.தினகரன் முனைவர் ஏ.சதீஷ் பாபு, முனைவர எம்.கணபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 30 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் ரமேஷ் குமார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியினை முனைவர் காமாட்சி ஒருங்கிணைப்பாளர், இரத்ததான மையம் தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி