கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நல்லூரில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கி கிளை சார்பில், வங்கியின் இடம் மாற்று விழாவினையொட்டி வங்கியின் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு சிஎஸ்ஆர் நிதியான 4,52,100 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்களின் முன்னிலையில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஒ குடிநீர் மையம், கணினிகள், பிரிண்டர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மேலும் இத்திட்டத்தில் இணைய நூலகம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது வங்கி மூத்த மேலாளர், தலைவர் ஆர்விஆர் பிரசன்னா, வங்கி சேலம் மண்டல தலைவர் ஆனந்த் ஆர் கிருஷ்ணன்,மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீ சந்திரசேகரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சந்திரமௌலி, துர்கா பவாணி மோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ் சிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும் நல்லூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ATM வேண்டும் என்று மேலாளர் பிரசன்னாவிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிறைவேற்றபட்டதால், இந்த விழாவில் கலந்து கொண்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி பொங்க கிளை முத்த மேலாளர் பிரசன்னா அவர்களுக்கும், வங்கியின் சேலம் மண்டல தலைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விழாவை சிறப்பித்தனர். வங்கியின் மேலாளார் நன்றியுரைடன் நாட்டு பன் உடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா