மதுரை: புனித வியாழன் கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். தவக்காலத்தின் இறுதி வாரமாகிய புனித வாரம் கடந்த ஞாயிறு குருத்தோலை ஞாயிறு தொடங்கியது. புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் தனது பணிவை வெளிப்படுத்தும் வகையில் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அதனை நினைவு கூறும் வகையில் நேற்றைய தினம் அனைத்து ஆலயங்களிலும் உள்ள 12 பேர் பொதுநிலையினர். தேர்வு செய்யப்பட்டு அவர்களது பாதங்களை பங்குத்தந்தையர்கள் கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு நள்ளிரவு 12 மணி வரை அனைத்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் ஆராதனையும் தொடர்ந்து நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அமைதியான முறையில் ஆராதனையும் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட போது அவர் பேசிய ஏழு வார்த்தைகளைப் பற்றி தியானிக்கும் வகையில் மறையுறைகளும் நடைபெறும் தொடர்ந்து மாலை 3 மணிக்கு சிலுவைப்பாதை ஜெப வழிபாடு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆலயங்களில் உள்ள சொரூபங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு ஆலயங்கள் மூடப்படும் இரவு 11 மணிக்கு ஈஸ்டர் என்னும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா ஆராதனை அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை நிறைவு செய்கின்றனர். மதுரை ஞான ஒளிவு. புரத்தில் பங்குத்தந்தை ஜோசப் உதவி பங்கு தந்தை சின்னதுரை மற்றும் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை லாரன்ஸ் ஆகியோர் வழிபாடுகளை சிறப்பு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள் மற்றும் அருட்பணிப் பேரவையினர் செய்து வருகின்றார்கள். மாலை 6 மணிக்கு ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய புனித வியாழன் நிகழ்வுகள், நாளைய புனித வெள்ளி வழிபாடுகள், ஈஸ்ட்டர் ஆராதனைகள் அனைத்தும் புனித பிரிட்டோ பள்ளி வளாகத்தில் நடைபெறும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஆண்டனி வினோத்