மதுரை: இயற்கையைக் காக்க வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சிலம்பாட்ட நிகழ்ச்சியில், மதுரை மாணவர்கள் 9 பேர், உலக சாதனை புத்தகத்தில்இடம் பெற்றனர்.தென்காசி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் பொதிகை சிலம்பக் கலைக்குழு இணைந்து இலஞ்சியில் இந்நிகழ்வை, நடத்தின. மதுரை மாவட்டத்தில், இருந்து, எம்.கே.ஏ. சிலம்பாட்ட பயிற்சி மையத்
திலிருந்து பயிற்சியாளர் குமார் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீமதி, அபிஷேக், சிவித்ரா,யுகேஷ் ராம், சூரிய பிரவேல், நரேஷ், பிரணவ், பிருத்வி, ஜெகதீஷ்
ஆகிய 9 மாணவர்கள் தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்
கொண்டு, சிலம்பம் சுற்றினர்.
இது, ‘டிவைன் உலக சாதனை’ புத்தகத்தில் தனித்திறமை சாதனையாகப் பதிவானது. தவிர, தமிழகம் முழுவதும் இருந்து600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற தொடர் சிலம்பம் சுற்றும் உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது. தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழகத்தலைவர் மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைமை போட்டி இயக்குனர் சுந்தர், சிலம்பாட்ட கழகச் செயலாளர் சேர்மப்பாண்டி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி