சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி கலைஞர் தமிழ் சங்கம் முனைவர் வேலாயுதராஜா எழுதிய சொல்லின் செல்வர் கலைஞர் நூல் வெளியீட்டு விழா கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்சங்கம் நிறுவனர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர் .பெரிய கருப்பன் நூலை வெளியிட தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூலினை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கலைஞர் தமிழ்சங்க செயலாளர் செந்தில்குமார், சாக்கோட்டை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆனந்தன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.ரவி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி