செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் ஏவிஎம் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியது இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் 24 பேரும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை குறித்தும் கூட்டு அமைப்பு வளர்ச்சியை குறித்தும் கூறினார்கள். மேலும் தங்கள் பகுதியில் சுகாதாரம் மேம்படுத்த எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளை குறித்து கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தமிழக அரசுக்கு நன்றியும் வாழ்த்துகளையும் கூறி தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து துணை முதல்வராக பொறுப் பேற்றிருக்கும் உதயாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்கள் நன்றிகளையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்