சிவகங்கை: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு மாநில அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம், இன்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு (நவ-12 செவ்வாய்க்கிழமை மாலையில்) தொடங்கியது. இதற்கு மாநிலத்துணைத்தலைவர் புலவர் ஆறு. மெய்யாண்டவர் தலைமை வகித்தார். தமிழ் ஆர்வலர் அ.சி.தியாகராசன் முன்னிலை வகித்தார். ” இந்திய அரசை வலியுறுத்தி, “செம்மொழித் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ” ” திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். “சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் ” என்ற கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டார்கள். இந்த அறவழிப்போராட்டத்தில் பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, வள்ளுவர் பேரவை, வீறு கவி முடியரசனார் அவைக்களம், தமிழ்த்தாய் கலைக்கூடம், பகுத்தறிவாளர் கழகம், தமுஎகச அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், குறள் வழித் தொண்டர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள். இந்நிகழ்வில் தாசில்தார் வெள்ளைச்சாமி, ஆசிரியைகள் சுவேதா, ஸ்டெல்லா, என்னாரெசு பிராட்லா, S.சையது, ஆ.புரட்சித்தம்பி, மாணிக்க வாசகம், கார்த்திகேயன், பேரா.தனுஸ்கோடி, கே.வி. இராமகிருட்டிணன், ஈசுவரன், கல்லல் பிரபு, முத்துராமலிங்கம் (சன்மார்க்க சங்கம்), ஜெகஜோதி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி