திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகேஷ்வரி, துணை தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் விநியோகம், மின்விளக்குகள், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு