செங்கல்பட்டு: செங்கை நகரத்தின் அடையாளமான இரா. வே. அரசினர் கலை கல்லூரியில், கல்லூரி முதல்வர், முனைவர். ப. கி. கிள்ளிவளவன் தலைமையில், 12 துறைகளில் பயிலும் சுமார் 4000 மாணவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர். லயன். ஜெ. ஜான்சன், சங்க தலைவர் T. J. ரவி, முன்னாள் பொறுப்பாளர்கள் ஹரிதாஸ், A. லட்சுமி, அன்பழகன், மற்றும் சுகுமாரன் ஆகியோர் இணைந்து மிக சிறப்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதில் மாணவர்கள் பொங்கலிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்