மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி மும்மு அவர்களை இன்று புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்து சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூபாய் 230 கோடி செலவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திடவும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.